வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தி பாதயாத்திரைகளுக்கு உண்டு என்பது வரலாறு! காந்தி நடத்திய தண்டி யாத்திரை ,சுதந்திரத்திற்கு பிறகு ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரின் 4,000 கீமீ பாதயாத்திரை, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியின் பாதயாத்திரை… என இது வரையிலான பாதயாத்திரைகள் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? ராகுல் காந்தி குறிப்பிட்டது போல நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது! மனிதாபிமானமற்ற ஆட்சியாளர்களின் கையில் அதிகாரம் சிக்கியுள்ளது! சிறு, குறுந்தொழில்கள் நசிந்து வருகிறது! குறிப்பிட்ட சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கவே பாஜக அரசு தன் ...