இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படம் லாஸ்ட் பிலிம் ஷோ என்ற குஜராத்தி திரைப்படம்! தற்போது இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. பதின் பருவச் சிறுவர்களை சினிமா எப்படியெல்லாம் ஆகர்ஷித்து, ஆட்டிப் படைக்கிறது என்பதை நுட்பமான கலை அம்சத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யக்கூடிய தகுதியோடு படம் உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. பான் நலின் எழுதி தயாரித்து, இயக்கியுள்ள இத்திரைப்படம் எதார்த்தமான சினிமாவாக உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமான பவின் ...