திராவிட இயக்கத்தார் சிலர் பாரதியாரை சாதியப் பார்வையுடன் விமர்சிக்கிறார்கள். பாரதி பிறந்த குலம், அவரது பக்திப் பாடல்கள், தேசியக் கண்ணோட்டம் ஆகியவற்றை வைத்து அவரை தமிழ்ச் சமூகத்திடம் அன்னியப்படுத்துகின்றனர்.  இதோ உண்மையான பாரதியாரை பாரதிதாசன் அன்றே துல்லியமாகப் படம் பிடித்து  காட்டியுள்ளார்; பாரதிதாசன், கனக சுப்புரத்தினமாக இருந்த இளமைக் காலத்தில் பக்திப் பாடல்களும், சிறுசிறு தனி பக்திபாடல்களும், இலாவணி போன்ற பாடல்களும் எழுதிக் கொண்டிருந்த பள்ளிக் கூட தமிழாசிரியர் மட்டுமே. பாரதியின்  பேச்சுக்களும், பழக்கமும், சிந்தனை போக்குகளும் படிப்படியாக பாரதிதாசனை பெரிதும் ஈர்த்து, பிறகு ...