எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் போல  கதாநாயகர்களைக் கடந்து படைப்பாளியே ஒரு பிராண்டாகி சினிமாவில் தனக்கான கொடியை பறக்கவிட்டவர் பாரதிராஜா! மாறிக் கொண்டிருந்த சினிமா களத்தில் புதிய படைப்பாளிகளையும், கலைஞர்களையும் தந்து திரைத்துறையின் திசை வழியை  மாற்றி அமைத்தவர்! பாரதிராஜாவின் படைப்புலகம் ஒரு பார்வை; ஒரு தலைமுறையையே தன் படைப்பாற்றலால் கட்டிப் போட்டவர் பாரதிராஜா. எம்.ஜி.ஆர் யுகம், சிவாஜி யுகம் என்பதற்கு இணையாக பாரதிராஜாவின் யுகம் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் அடி எடுத்து வைத்த காலகட்டம். நடிகர் திலகம் சிவாஜியின் அலை ...