ராமர் கோவில் திறப்புவிழா ஆர்எஸ்எஸ்- பாஜகவின் நிகழ்ச்சியாகும். அது சர்வாதிகார அரசியலை வலிமைப்படுத்துகிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணமானது, இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக விழுமியங்களை  பேசுகிறது. பரத் நியாய யாத்திரை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த விஷயமில்லை..! ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்து, ஒரு ‘ஹைப்’ ஏற்படுத்தி, ஆட்களை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய நாட்டின் ஜனநாயகம் குறித்தும், அதன் நெறி முறைகள் குறித்தும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ...