இஸ்ரேலின் கொடூர துப்பாக்கி குண்டுகள் பாலஸ்தீனத்தின் குழந்தைகளை, பெண்களை பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த வண்ணம் உள்ளது! மருத்துவமனைகள் கல்லறைகளாகி வருகின்றன! உலகின் மனசாட்சி உறங்கிவிட்டதா..? என உருக்கமாகவும், உரக்கவும் அருந்ததிராய் கேட்கும் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தன! ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் நவம்பர் 16 அன்று புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம். காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று யூதர்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும், இந்துக்களும், கம்யூனிஸ்டுகளும், கடவுள் மறுப்பாளர்களும், கடவுளை உணரமுடியாது என்கிறவர்களும் பல்லாயிரக்கணக்கில் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுடைய குரலை அவர்களின் குரல்களோடு சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெர்மனி உள்ளிட்ட எந்த ...
இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் பின்னுள்ள ஏகாதிபத்திய நலன்கள், அன்றைய தார்மீக எதிர்ப்புகள்! இஸ்ரேலின் மனித நேயத்திற்கு எதிரான கொடூர போர் குற்றங்கள்..! பாலஸ்தீனர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியம், சர்வதேச அளவில் எடுக்க வேண்டிய நிலைபாடுகள் போன்றவை குறித்து நேர்காணல் தருகிறார் ஏஐடியுசி வகிதா! ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கு ஆசியப் பொறுப்பாளர். தமது சொந்த மண்ணில் 86 சதவிதத்தை பறி கொடுத்து அகதிகளாகி வெறும்14 சத நிலத்தை மட்டுமே தம்வசம் வைத்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலால் நடத்தப்படும் ...
ஹமாஸின் ஒரு நாள் தாக்குதலுக்கு பதிலடியாக பல நாட்களாக காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது! குடியிருப்பு பகுதிகள், அகதி முகாம்கள், மருத்துவமனைகள்… எல்லாம் தாக்கப்படுகின்றன. காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி யூதக் குடியேற்றம் திட்டமிடப்படுகின்றது! அக்டோபர் 7 அம் தேதி ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்ததில் சுமார் 1,200 பேர் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது போரை அறிவித்தது. உலகில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் ஒரு குறுகிய பகுதியே ...