லதா எழுதிய இந்த நூல் பாலியல் கல்வி தொடர்பான நூல்.பொய்மைகளை, போலித்தனங்களை தவிர்த்து, பெண் குழந்தைகள் தொடர்பான உண்மையான அக்கறை சார்ந்து நேர்பட எழுதப்பட்ட நூல்! இந்த நூலின்  தாக்கம் ஆண்,பெண் பாலியல் உறவில், சமூக உறவில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ‘காமம் குறித்த உரையாடலை ஒப்பனைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிரி பேசிச் செல்லும் புத்தகம்’ என்கிற குங்குமம் தோழி ஆசிரியரான மகேஸ்வரியின் கூற்று சரியானதே! ‘எனக்கான தாக்கங்கள், மற்ற மனிதர்களுடனான என் விவாதங்கள், என் அனுபவங்கள், என்னுடன் மனம் திறந்து பகிர்ந்த ...