இருக்கிற சட்டத்தில் என்ன குறை? நாம் வைக்கும் அடிப்படையான கேள்வி, சட்டங்களை கடுமையாக்கினால் போதுமா? சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர் பலவீனமாகவும், சுயநலமாகவும் இருந்தால் சட்டங்களால் என்ன பயன்? குற்றவாளிகளை தப்புவது சட்டத்தாலா? சட்டத்தை கையாளும் அதிகாரத்தில் உள்ளவர்களாலா? ”பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதிலும் தமிழக அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ...

ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பல ஆண்டுகளாக தன் கைவரிசையை காட்டி வந்துள்ளார் என்றால், அங்கு அவருக்கு தோதாக இருந்தவர்களை ஏன் தூக்க மறுக்கிறார்கள்? ஞானசேகரனுக்கு பல்கலையின் உள்ளேயும் லோக்கல் காவல்துறையிலும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை; அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை பொறுத்த வரை  ஊடகங்களுக்கு அது கொஞ்ச நாளைக்கு பரபரப்புக்கான செய்தி! அரசியல் கட்சிகளுக்கோ தங்கள் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க கிடைத்த வாய்ப்பு. இதனால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை அறுவடை செய்வது ...