கேரள அரசுக்கு குடைச்சல்களை கொடுப்பதில் மும்முரமாக உள்ளார் ஆளுநர் ஆரிப் முகமது கான். அமைச்சரை நீக்கச் சொல்வது, துணைவேந்தர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி அடிக்கப் பார்ப்பது என தன் அதிகார வரம்பை மீறி ஆட்டம் போடுவதால் அவருக்கு கடிவாளம் போட்டுள்ளது கேரள அரசு! பாஜக ஆளுநர்களின் பாசிச விளையாட்டுகள்! பொறுத்துப் பார்த்த கேரள இடது முன்னணி அரசு தற்போது பொங்கி எழுந்துள்ளது. கலாமண்டலம் என்றழைக்க கூடிய நிகர் பல்கலைகழகத்தின் “வேந்தர்” பதவியிலிருந்து ஆளுனர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கை நவம்பர் ...