தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்’ என்பதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களாக்கும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் அக்டோபேர்-17, 2025-ல் நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவுகளை, பாதிப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை; இந்த சட்டம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வழிகோலுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் அறிவித்தார். உண்மையில் கல்வியின் தரம் உயருமா? ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை உத்திரவாதப்படுத்துமா?, அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர், ...













