”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்;   நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதை தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் ...