அமெரிக்கா வாழ்வதற்காகவும், தன் அதிகாரத்தை நிலை நாட்டவும் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு  கண்டிஷன் போடுகிறார். சுயாதீனமுள்ள இந்தியாவை ஆட்டிப் படைக்க துடிக்கிறார். இஸ்ரேல், ஈரான், ரஷ்யா விவகாரத்தில் நமது தனித்துவத்தை பேணாமல் அமெரிக்க சார்பை வெளிப்படுத்திய மோடி, தற்போது தன்மானத்தை தொலைத்து எப்படியெல்லாமோ தவிக்கிறார்; இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக கச்சா எண்ணெயை நீண்ட காலமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. நமது தேவையான கச்சா எண்ணெய்யில் 87.7% அளவு நாம் இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறோம். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ...