‘மதம் ஒரு அபீன்’ என மார்க்ஸ் கூறினார்! இந்த ஜனநாயக யுகத்தை சர்வாதிகாரமாக்கி கொள்ள அரசியலையே அபினாக மாற்றிவிட்டார்கள், அரசியல்வாதிகள்! ‘கட்சி விசுவாசம்’ என்பது கண்களை குருடாக்க வல்லதாகவும், ‘தலைமை விசுவாசம்’ என்பது தற்கொலைக்கு ஒப்பானதாகவும் மாறியுள்ள காலச் சூழல் குறித்த ஒரு அலசல்; ஒரு காலத்தில் –சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாத அரசியல் தழைத்தோங்கி இருந்தது. ‘பொது வாழ்வும், அரசியலும் தொண்டாகப் பார்க்கப்பட்ட பொற்காலம்’ ஒன்று நிஜமாகவே இருந்தது என்பதை ஆச்சரியத்தோடு நினைத்துப் பார்க்கும் நிலையில் தான் நாம் இன்று ...