போட்டியாளர்களை வீழ்த்தி, தொலை தொடர்புத் துறையில் தனிப்பெரும் ராஜாங்கம் செய்யும் ஜியோவின் அதிரடி கட்டண உயர்வால் 6 நாட்களில் ஒரு கோடிப் பேர் பி.எஸ்.என்.எல்லுக்கு மாறியுள்ளனர். ஆனால், பெரும் பாய்ச்சலில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் தக்க வைக்குமா..? ஒரு அலசல்; பத்து வருடங்கள் முன்பு இந்தியாவில் BSNL, Airtel, Aircel, Vodafone, Uninor, Idea, Tata, Mtnl மற்றும் இன்னும் சில மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் களத்தில் இருந்தன. ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்தது. அன்று Incoming அழைப்புகள் இலவசம், ...