பொருளாதார முன்னேற்றமில்லை, வேலை வாய்ப்பில்லை ஆயினும் இருபதாண்டு நிதீஸ்குமார் ஆட்சிக்கு மீண்டும் நீட்டிப்பு! தேஜஸ்விக்கு பேராதரவு இருந்தது. ஒரு மாற்றத்திற்கு மக்கள் விரும்பினார்கள்! ஆயினும் வெற்றி விலகிச் சென்றுள்ளது. காரணம் என்ன..? இவ்வளவு அவமானகரமான தோல்வி எப்படி இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டது..? பீகார் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்றல்ல. வாக்காளர் பட்டியலே தான்தோன்றிதனமாக வெட்டி ஒட்டபட்ட வேளையில், அதனடிப் படையில் நடக்கும் பீகார் மாநில தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்காது என்றே சில நாட்களுக்கு முன்னர் நாம் கூறியிருந்தோம். இன்று வெளியான பீகார் தேர்தல் ...













