இந்தியாவின் வேறந்த மாநிலத்தை விடவும். கடந்த 3 ஆண்டுகளில், மக்களின் கடும் எதிர்ப்பை மீறி 28 பேரூராட்சிகள் புதிய நகராட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன. 10 புதிய மாநகராட்சிகள் உருவாகி உள்ளன. கிராமப் புறங்களை விழுங்கி பெரு நகரமயமாக்குவதில் யாருக்கு ஆதாயம்? இதன் பின்னணி என்ன..? திமுக ஆட்சியில் கடந்த மூன்றே ஆண்டுகளில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி , திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 10 நகராட்சிகள் மாநகராட்சிகளாக உருவாக்கம் கண்டுள்ளன. ஒவ்வொரு நகராட்சி உருவாக்கமும் சரி, மாநகராட்சி உருவாக்கமும் ...