கொரானா பீதியைக் காட்டி சட்டமன்ற தேர்தல்களோ, உள்ளாட்சி தேர்தல்களோ தள்ளிப் போடப் படுவதில்லை. புத்தகக் கண்காட்சியை மட்டும் தடுத்துவிட்டு, ஏகப்பட்ட கெடுபிடிகளோடு தற்போது நடத்தச் சொல்கிறார்கள்! உற்சாகத்தோடு நடத்த வேண்டிய விழாவை, உறுத்தலோடு நடத்தச் செய்கிறார்கள்! தமிழ் பதிப்பகங்களின் ஒரே நம்பிக்கை வருடத் தொடக்கத்தில் வரும் சென்னை புத்தக கண்காட்சி தாம்! இந்த வருடம் தொடக்கத்தில் நடக்க இருந்ததை, கோவிட் பரவலை காரணமாக்கி, தமிழக அரசு நடத்தக் கூடாது என்று தடை விதித்துவிட்டது! இந்த கடைசி நேர அறிவிப்பால் ஜனவரி 6 தொடங்க இருந்த ...