பரிசல் சிவ. செந்தில்நாதன் இலக்கிய ஆர்வலர்களுக்கு மிக பரிச்சியமான பெயர்! ‘நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்ற இலக்கோடு முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பதிப்புலகம் சந்தித்து வரும் சவால்கள், நூலக இயக்கம் , வாசிப்புப் பழக்கம் போன்றவை குறித்து பேசுகிறார். நல்ல புத்தகங்களை கொண்டு வர நினைக்கும் உங்களைப் போன்ற சிறு பதிப்பகத்தார் சந்திக்கும் சவால்கள் என்ன? இங்கு மொழி பெயர்ப்பாளர்கள் குறைவு. மொழிபெயர்த்ததை சரிபார்க்க, எடிட்டர்கள் இல்லை. ஒரு பதிப்பகம் என்றால் அதற்கு ஒரு கணினி, தட்டச்சு செய்பவர், ...