உலகம் முழுக்க புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு தேதியில் வாழும் நிலப்பரப்பின் இயற்கை சூழலுக்கு ஏற்ப கொண்டாடுகின்றன! புத்தாண்டை தீர்மானிப்பதில் இனங்கள், மதங்கள், நாடுகள் போன்றவை வெவ்வேறு வகையில் ஒன்றுபட்டும், வித்தியாசப்பட்டும் உள்ளன; ஒருவழியாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களை  கொண்டாடி தீர்த்தாயிற்று! புத்தாண்டு கொண்டாட்டம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே  பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளில் அதன் வேர்களை கொண்டுள்ளது. ஒரு புதிய ஆண்டின்  தொடக்கத்தைக் குறிக்கும் கருத்து, காரணம்  இயற்கையின் சுழற்சிகளுடன், குறிப்பாக பருவங்கள் மற்றும் வான இயலின்  இயக்கத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள்  ...