60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் வழியாக தமிழ் தொல்குடிகளின் வரலாற்றை  நூற்றுக்கு மேற்ப்பட்ட நூல்களின் வழியாக அகில உலகிற்கு அள்ளித் தந்த கல்வெட்டறிஞர் புலவர் செ.ராசு  மறைந்தாலும், நாம் உத்வேகத்தோடு பயணிக்கதக்க பாதைகளை காட்டிச் சென்றுள்ளார். மன்னர்கள் வரலாற்றை ஆய்வு செய்து வந்தோர் மத்தியிலே, மக்கள் வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இலக்கியங்கள் வழியாக மட்டுமே வரலாற்றை அறிவதைக் கடந்து, வாழ்விட ஆராய்ச்சி வழியாக கண்டறிய முற்பட்டவர். தளாராத மொழிப் பற்றும், ...