அதிரடியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாழும் வீடுகளை, வணிக வளாகங்களை இடித்து அவர்களை ஏதுமற்ற அனாதைகளாக்கி நடுத் தெருவில் நிறுத்துவது இங்கு அரசியல் தர்மமாகவே அனுசரிக்கப்படுகிறது! இந்த வகையில் சில லட்சம் வீடுகள், கடைகள்  இடிக்கப்பட்டு, சில லட்சம் ஏக்கர் நிலங்களும் பறிக்கப்பட்டுள்ளன; கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆளும் மாநில அரசுகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் வீடுகளையும், வணிக இடங்களையும் புல்டோசர் மூலம் இடித்து நொறுக்குவதை ஒரு புதுவித கலாச்சரமாக வளர்த்து வருகின்றனர். இத்தகைய இடிபாடுகளுக்கு உள்ளானவர்கள், இந்துக்களின் ஊர்வலத்தில் கல்லெறிந்தார்கள், கலவரச் ...