பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானதருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த விவகாரத்தின் அதிர்வு இன்னும் தொடர்கிறது…லட்சக்கணக்கான ரசிகர்கள் வரக் கூடிய நிகழ்வில் எந்த முறையான திட்டமிடலும் இல்லை.. நிச்சயமாக இது போன்ற நிகழ்வுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடுவார்கள் என யாராலும் ஊகிக்க முடியும். மைதானத்தின் கொள்ளளவு வெறும் 34,600 எனும் போது எந்த அடிப்படையில் அனுமதி தருவது? உள்ளே வர முடியாதவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த கலந்துரையாடல்கள் நிகழ்த்தக் ...