சமீபகாலமாக பெரியாரிஸ்டுகளும், திராவிடக் கொள்கையாளர்களும் திமுகவில் தனிமைப்பட்டு வருகின்றனர். ஆட்சித் தலைமை பெரியாரிடம் இருந்து வெகு தூரம் விலகிச் செல்லும் சூழலில் – திமுக தலைமை தார்மீகத் தகுதியை இழந்து நிற்கும் நிலையில் – ஆ.ராசா பேசியுள்ளதன் பின்னணி தான் என்ன..? நாத்திகம் என்பதும், பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பதும், வெறும் பொழுது போக்கிற்காகப் பேசப்படும் திண்ணை பேச்சு தானா? ஆட்சியாளரான பிறகும் பொறுப்பாக செயல்பட வேண்டிய விவகாரத்தில் எல்லாம் கோட்டை விட்டுவிட்டு, பழைய பல்லவியான ”மனு தர்மத்தில் எட்டாவது அத்தியாயத்தில், 415 வது ...