ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது; காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் ...
டி.எம்.கிருஷ்ணாவிற்கான சங்கீத கலாநிதி விருது சர்ச்சையானதில், பெரியார் தான் பார்ப்பன சமூகத்தின் ‘டார்கெட்டாகி’யுள்ளார்! கிருஷ்ணாவை ஆதரித்து பொதுச் சமூகமே வாள் சுழற்றிக் கொண்டுள்ளது. ஆனால், தன்னை முன்னிட்டு, பெரியார் தாக்கப்படுவது குறித்து, தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பதன் பின்னணி இது தான்; கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து தான் பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்திரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ...
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவது சர்ச்சையாகி, பொதுத் தளத்தில் கிருஷ்ணாவிற்கு பேராதரவு ஏற்பட்டுள்ளது! பார்ப்பனர்களில் ஒரு தரப்பே கிருஷ்ணாவை ஆதரிப்பதால், அவர் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பெரியார் தாக்கப்படுவது குறித்து தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பது ஏன்? டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளாக முற்போக்காளராக அடையாளம் காட்டப்பட்டும், புகழப்பட்டும் வருகிறார்! திராவிட இயக்கத்தாரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் அவரை புகழ்கின்றனர். மீனவர் குப்பத்திற்கு சென்று அவர் கர்நாடக இசை கச்சேரி நடத்தியது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளானது. அதன் விளைவாக, ராமன் ...
”வைக்கம் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமில்லை” என ஆர்.எஸ்.எஸ் தூதர்கள் அடிக்கடி பேசி வந்தனர். உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளன! வைக்கத்தில் பெரியாரின் உண்மையான பங்களிப்பு என்ன? ”வைக்கம் போராட்டத்திற்கும், பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமே இல்லை. அதில் கைதான பலரில் பெரியாரும் ஒருவர். அவ்வளவு தான். அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈ.வே.ராவின் பெயர் காணப்படவில்லை.. டி.கே. மாதவன் போன்றவர்களின் வரலாறுகளிலும், நினைவுகளிலும் கூட ஈ.வெ.ராவின் பெயர் தனியாக ...
யாகம், வேள்வி என்பவை இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டதா? அல்லது அச்ச உணர்வை பணமாக்கும் பிழைப்புவாதிகள் சம்பந்தப்பட்டதா? யாகங்களால் நடக்கவுள்ள எதையும் தடுக்க முடிந்திருக்கிறதா? ஜெயலலிதா, சசிகலா நடத்திய யாகங்கள்! சபரீசன் யாகம் நடத்தியதன் பின்னணி என்ன? நோக்கங்கள் என்ன? யார் ஒருவருக்கும் உள்ள இறை நம்பிக்கையை நாம் விமர்சிப்பது தேவையற்றது என்பதை ஏற்கலாம். ஆனால், பெரும் பொருட்செலவில் நெய்யையும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்தவற்றையும் நெருப்புக்கு அர்ப்பணிக்கக் கூடிய – பல லட்சங்கள் பார்ப்பனர்களுக்கு தட்சணையாக தரக் கூடிய – யாகம், வேள்விகள் ...