நவசக்தி, அலை ஓசை, கடிதம்.. போன்ற நாளேடுகளில் நாள் தோறும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடிதங்களும், கட்டுரைகளும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களும், எழுச்சியும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. நெஞ்சை அள்ளும் அந்த எழுத்துக்கள் காமராஜர் கரங்களுக்கு வலுசேர்த்து, காங்கிரசை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சென்றதெல்லாம் ஒரு பொற்காலம்; 1961 -இல் தி.மு.க.விலிருந்து வெளியேறிய ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி.சம்பத், நேருவின் மறைவுக்குப்பிறகு, தமது ‘தமிழ் தேசியக் கட்சி’யைக் காங்கிரசோடு இணைத்தபோது, காங்கிரஸ் மேடை முன்பைவிடப் பலமடங்கு பலனடைந்தது. காங்கிரஸ் தோல்விக்குப்பிறகு, தேசிய மேடைகளில் எழுச்சி ...


















