”சாதி ஆதிக்கத் தாக்கத்தால் அதி மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் மீள முடியாத அச்சத்தில் உறைந்திருக்கிறோம். எங்களுக்கு உதவவோ, ஆதரவாக நிற்கவோ எந்தக் கட்சியுமில்லை…” என்ற கோபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தினர் இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். என்ன நடந்தது?; 967 வாக்குகள் உள்ள இந்த கிராமத்தின் எளிய தலித் மற்றும் விளிம்பு நிலை சாதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். காரணம், கடந்த மார்ச்-2 ஆம் தேதி எந்த முன் விரோதமும் அற்ற நிலையில் அதிரடியாக அந்த கிராமத்திற்குள் நுழைந்த ஆதிக்க ...