ச.முருகன், தண்டையார்பேட்டை,சென்னை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொலைகாரனை விடுதலை செய்வதா என ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனரே? 31 வருட நெடிய சிறைவாசம் என்பது தூக்கு தண்ட்னையை விடக் கொடியது! எந்தக் குற்றவாளிக்குமே இது போன்ற மிக நீண்ட சிறைவாசம் என்பது ஏற்புடையதன்று! அது சிறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்! ஒருவரை விடுதலை செய்வதால் இந்த சமூகத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்ற அளவுகோலே போதுமானது! எம்.ராதிகா, தேனீ சில அரசியல் கட்சிகள் மொழி, சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றனர் என்கிறாரே பிரதமர் மோடி? ...
31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு! சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு ...