கால்கள் செயல் திறனற்ற ஊனமுற்ற பேராசிரியரைக் கண்டு இவ்வளவு பயப்படுவானேன்..? உரிய காரணங்களின்றி பத்தாண்டுகள் சிறைவாசம்! அவ்வளவு பயங்கரவாதியா இவர்? செய்த குற்றமென்ன..? மனித உரிமை செயற்பாட்டாளராக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமா? அரசின் பதற்றத்திற்கு காரணமென்ன..? பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மும்பை உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 5 வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டது முதல் சக்கர நாற்காலியே கதியாக வளர்ந்த சாய்பாபா தனது விடா முயற்சியாலும், தளராத நம்பிக்கையினாலும் படித்து தில்லி பல்கலைக்கழக பேராசிரியரானவர். ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ...