நூறு திருக்குறளை வாழ்வியல் தொடர்பான நிஜ சம்பவங்களுடன் கேட்போருக்கு சலிப்பு தோன்றா வண்ணம் சுவைபட ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகுமார்! ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல பெருந்திரள் மக்கள் லயித்துக் கேட்ட அன்றைய நிகழ்வு ஒரு சிறப்பான அனுபவமானது..! நம் காலத்தில், தமிழகத்தில், முற்றிலும் வேறுபட்ட விதத்தில் திருக்குறளுக்கு ஓர் அரங்கேற்றம் நிகழ்ந்தது. “திருக்குறள் நூறு..!” என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் அவர்கள், தான் எழுதிய புத்தகத்தை அப்படியே மேடையில் வண்ண விளக்குகள் பளிச்சிட , மிகுந்த உயிரோட்டத்துடன் பச்சைத் தண்ணீர் கூட ...