கடல் அலை போன்ற மக்கள் கூட்டம். இனி ஆட்சியில் தொடரவுள்ள ஒவ்வொரு நாளும் இது போன்ற எதிர்ப்பு பேரணிகளையும், பொதுக் கூட்டத்தையும் பாஜக அரசு பார்த்தாக வேண்டும். பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியான அலை வட இந்தியாவில் வேகம் கொண்டுள்ளது என்பதை டெல்லி ராம்லீலா மைதானம் நிதர்சனமாக்கியது. அது விரைவில் இந்தியா முழுமையும் சூழன்றடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தெரிகின்றன; தெளிவான செய்தியை தந்துள்ளன! இந்தியா கூட்டணியின் டெல்லி பேரணியும், பொதுக் கூட்டமும்! மக்கள் இனி மேலும் பாஜக அரசின்  திருட்டு வெற்றிகளை, தில்லுமுல்லு ஆட்சியை ...