தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது; பல விஷயங்களில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது என்பது மிக்க மகிழ்ச்சியாக தோன்றினாலும், தமிழகத்தின் சில யதார்த்தங்கள் அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன…! மத்திய அரசின் ஸ்டைலில் தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை( மார்ச்14)  தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். தமிழக சட்டப்​பேர​வை​யின் கூட்டத் தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. ...