அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது கொஞ்சம் தான்! அண்ணா பல்கலை அங்கீகரித்த சுயநிதி பொறியல் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனங்களில் எத்தனையோ தகிடுதத்தங்கள்! இதன் பின்னணி என்ன? தமிழக உயர் கல்வித் துறையை பணம் கறக்கும் காமதேனுவாகப் பார்க்கும் அமைச்சர் பொன்முடிக்கு இதில் என்ன சம்பந்தம்..? அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் முழு நேரமாகப் பணிபுரியும் 353 பேராசிரியர்கள் மூன்று முதல் 11 கல்லூரிகள் வரை ஒரே நேரத்தில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டி இருப்பது அறப்போர் இயக்கத்தால் அம்பலப்பட்டு பெரும் ...