பொதுத் துறைகளை தனியார்மயமாக்கியே தீருவது என்ற தணியாத தாகத்தில் செயல்பட்டு வரும் கட்சி பாஜக மட்டுமே என இது வரை நாம் நம்பியது தப்பாகி விட்டது. இதோ, பாஜக காட்டிய வழியில் தப்பாமல் நடைபோடுகிறது திமுக அரசு. போக்குவரத்து கழகத்தில் தனியார் ஆதிக்கம் தழைத்தோங்க வழி சமைத்த தமிழக அரசு; தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புகளையும் , போராட்டங்களையும் மீறி போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார்மயமாக்கி வருவதில் முன்னேறிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தமிழகத்தில், எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரத்து 634 ...
பொன் முட்டையிட வேண்டிய போக்குவரத்துத் துறை 56,000 கோடி கடனில்! ஓட்டுநருக்கு 12 மணி நேர வேலை, விடுமுறை, சம்பள உயர்வு, ஓய்வூதியப் பயன்கள்.. எல்லாம் கட்..என ஊழியர்களை வறுத்தெடுத்தது போதாதென்று, காலாவதி பேருந்துகள், காலி பணியிடங்கள், தனியார்மயம் ..என ராங் ரூட்டில் போக்குவரத்து துறை; போக்குவரத்து துறை சார்ந்த தொழிற்சங்கங்களான ஏஐடியுசியும் ,சிஐடியுவும் வரும் ஜனவரி -21 மற்றும் 22 தேதிகளில் தமிழக அரசை எதிர்த்து பெரிய போராட்டங்களை அறிவித்துள்ளன. பல கட்ட பேச்சு வார்த்தைகள், பல கட்ட போராட்டங்கள்..என எத்தனை தான் ...












