நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தி கைதாகியதைத் தொடர்ந்து பல நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் அதிர்ந்து போயுள்ளனர். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்திருக்கும் போதை பொருள் விவகாரத்தில் மிகவும் அரிதாகவே பிரபலங்கள் கைதாகிறார்கள்; இன்றைய தமிழகத்தை எடுத்துக் கொண்டல் போதைப் பொருகள் பயன்பாடு என்பது பள்ளி, கல்லூரிகள் அளவுக்கு வியாபித்துவிட்டது. கஞ்சா, அபின், பிரவுன் சுகர், குட்கா, போதை ஊசி போட்டுக் கொள்ளுதல்..இயல்பாக நடக்கின்றன. இவை தடை செய்யப்பட்ட தீமை விவகாரங்கள் என்றாலும் தங்கு ...