போபால் விஷவாயு கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் சுமார் 4,000 பேரை பலி வாங்கி, சுமார் ஆறு லட்சம் மக்களை பாதித்தது. மக்கள் பட்ட அவஸ்த்தைகள், அந்த ஆலையின் அலட்சியம், இரயில்வே ஊழியர் குலாம் தஸ்தகீர் போன்றோர் உயிரைப் பணயம் வைத்து  மக்களைக் காப்பாற்றியது..  உண்மைக்கு நெருக்கமான புனைவு; இதுபோன்ற கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறாமல் எடுக்க வேண்டும். அதே சமயம் தெரிந்த முடிவு தான் என்பதால் சுவாரசியம் குன்றாமலும் எடுக்க வேண்டும். இதில் பிழை ஏற்பட்டால், நோக்கம் நல்லதாக இருந்தாலும் படம் தோல்வி ...