சதா சர்வகாலமும் சனாதனக் கருத்தைப் பேசி, சர்ச்சை செய்யும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.ரவிக்கு எதிராக தற்போது தமிழகமே போர்க் கோலம் பூண்டுள்ளது. தமிழகம் எங்கும் ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் ..! தற்போதைய பேச்சுக்கான ரியாக்‌ஷன்களைப் பார்த்தால்.., அவரை ‘பேக் அப்’ பண்ணி விரட்டியடிக்கும் காலம் நெருங்குகிறதோ..! இது நாள் வரை ஆளுனருக்கு எதிராக போராடத் தயங்கிய திமுகவே தன் தயக்கத்தை உடைத்து தைரியமாக கூட்டணிக் கட்சிகளை அணிதிரட்டி வரும் ஏப்ரல் 12 அன்று ஆளுனர் மாளிகை முன் போராட்டக் களம் காண்கிறது. இதில் அனைத்து திமுக ...