சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. எளிமையானவர். கொள்கைப் பிடிப்பும் உறுதியும் மிக்கவர் தோழர் ப.மாணிக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக 1978 முதல் 1992 வரை பணியாற்றிய தலைவர். பொதுவாழ்வில் ஒரு மாணிக்கம் என புகழப்பட்டவர். இன்றைக்கு அவரது பிறந்த நாள்; கொள்கை பிடிப்பு,  அணிகளை அரவணைத்துக் கொள்ளும் தன்மை, மக்களோடு கலந்துரையாடும் பான்மை கொண்டு தலைமை பண்பு நிறைந்தவராக விளங்கினாலும், சாதாரண தொண்டராக, எளிமையின் இலக்கணமாக இறுதிவரை காட்சியளித்து வந்தார். பொது வாழ்க்கை களத்தில் இயல்பாகவே எளிமையும் அடக்கமும் ஒழுக்க முறைகளும் ...