மனித உரிமை செயற்பாட்டாளர், ஓய்வறியாத போராளி, மக்கள் இயக்கங்களோடு இணைந்து களம் கண்டவர்! காத்திரமான களப் பணிகள் மட்டுமின்றி, மனித உரிமைக்கான கருத்தாக்கங்கள் சமூகத்தில் வலுப்பட இடையறாது இயங்கியவர் என்ற வகையில் மகபூப் பாட்சா பற்றிய பல்வேறு ஆளுமைகளின் பார்வை; மதுரையில் இயங்கினாலும், இந்திய அளவில் மனித உரிமைத் தளங்களில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் மதுரை சோக்கோ அறக் கட்டளையின் நிறுவனர் மகபூப் பாட்சா. இவர் கல்லீரல் பழுது காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சூழலில் 14.02.2024 ஆம் நாள் மாலை ஐந்து ...