அடேங்கப்பா! வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகிவிட்டாரய்யா! எதற்காக இந்த பணம் என்றால், இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும்…? குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா? குழந்தைகளுக்கான கல்விச் செலவை சமாளிக்க முடியுமா? இதையெல்லாம் எண்ணி பார்த்துதான் முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். அதன்படி ...














