தொகுதி மறுவரையறையாம்! மகளிர் மசோதாவாம்! அவரவர்  நோக்கத்திற்கு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்! அந்த உள் நோக்கத்தை உடைத்து பார்த்தால், இவர்கள் உள்ளீடற்ற உலுத்துப் போன பிற்போக்குவாதிகள் என்பதைத் தான் இவர்களின் கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்கு சொல்கிறது; ஏன் இந்த திடீர் அவசரம்..? 2023 லேயே மகளிர் மசோதா நிறைவேறிவிட்டது. ஆனால், அதை நிறைவேற்ற மறுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு முடித்த பிறகு அமல்படுத்துவோம் என்ற ஆறப் போட்டார்கள். இந்த மூன்று வருஷமாக அந்த இரண்டையும் நிறைவேற்றுவதில் எந்த முனைப்பையும் ...