சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் காந்தியடிகள்! அவர் வாழ்க்கையே நமக்கான செய்தி தான்! அந்த வகையில் பல்வேறு சம்பவங்களில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், பகைவர்களை வென்றெடுத்தார் என்பது இன்றைக்கும் நமது சமூக, அரசியல் வாழ்வுக்கான பாடமாகும்! மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம்  கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது என்று எண்ணும் வரை கூட பிரச்சினை இல்லை, ...