மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸ் மீது பழியை போட்டு கடந்து விட முடியாது. அங்கு நடந்த ஏகப்பட்ட பித்தலாட்டங்கள், அத்துமீறல்கள்.. அதற்கு ஒத்துழைத்த அரசு நிர்வாக அமைப்புகள், ஆளுமையில்லாத தேர்தல் ஆணையம்.. பொய்மை கருத்துருவாக்க ஊடகங்கள்.. போன்றவற்றை குறித்து பேச நிறைய உள்ளது; மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில இடைத் தேர்தல்கள் முடிவுகள் வந்து விட்டன. இதனுடன் கூட சில மாநிலங்களில் – உ.பி,பீகார்,கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ம.பி – நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் வெளி வந்துள்ளன. ...