ராய்டர் நிறுவன தகவல்படி 40 பேர் சாவு. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமாம். காணாமல் போனவர்கள்  எண்ணிக்கை தெரியவில்லையாம். ஒரே நேரத்தில் எட்டு கோடி பேர்களை குவியவிட்டால் எப்படி சமாளிக்க முடியும்..? எப்படி  நடந்தது? எங்கே பிழை ஏற்பட்டது? உலகின் மிகப் பெரிய ஆன்மீக பெருவிழாவான மகா கும்பமேளா சுமார் 40 கீமீ பரப்பளவில் நடைபெறுகிறது. அதிலும், அந்த திருவேணி சங்கமம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை  சங்கமிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குளித்து விட ...

உத்திரபிரதேசம், பிரயாக்ராஜ் என்ற இடத்தில் பல கோடி மக்கள் திரளும் மகா கும்பமேளா  நடந்து கொண்டுள்ளது. இந்து மத நம்பிக்கை சார்ந்து 45 நாட்கள் நடக்கும் இந்த உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வின் பல்வேறு பரிமாணங்கள் வியப்பளிக்கக் கூடியவை; சுவாரஷ்யமானவை, பன்மைத்துவம் கொண்டவை; மகா கும்பமேளா இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உலக அளவிலான மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.. இது பலதரப்பட்ட கலாச்சாரப் பின்னணி மற்றும் நம்பிக்கையில் உள்ளவர்களை ஒன்றிணைக்கிறது, ஒன்று சேருதல், மோட்சத்தை விழைதல், புனித நீராடல் மூலம் பாவங்களை ...