உயர்வு, தாழ்வு, சாதி பேதங்களற்ற நிகழ்வாக நடக்க வேண்டிய கோவில் திருவிழாக்கள் பட்டவர்த்தனமாக பாகுபாட்டை வெளிப்படுத்தும் விழாவாக மாறி வருவது சமீபத்திய அதிர்ச்சி! ஆந்திராவின் திருப்பதி, கேரளாவின் சபரிமலை ஆகிய தளங்களில் கூட இல்லாத ஒரு அநீதி, தமிழ்நாட்டில் மட்டும் சாத்தியமாவது ஏன்? தமிழ்நாடு ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு சமீபத்தில் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா சென்ற அனைவருக்குமே ஏற்பட்டது! சமீப காலங்களில் தீபத் திருவிழா நிகழ்வில் காவல்துறை கெடுபிடிகள் அதிகரித்து வருவதை எல்லோரும் உணர முடிந்தாலும், திமுக ...