நடந்து முடிந்த தேர்தல் உடைக்க முடியாது என்று நினைத்ததை எல்லாம் உடைந்தெறிந்து விட்டது. அது தான் மக்களாட்சியின் பலம். மக்களாட்சி ஒரு பலம் பொருந்திய ஆயுதம். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு சமூக, பொருளாதார அரசியல் மாற்றத்தை எப்படி சாத்தியமாக்கலாம் என அலசுகிறார், பேராசிரியர் பழனித்துரை இதுவரை தேர்தல் பற்றிக் கட்டமைத்த கருத்தாக்கங்கள் அனைத்தையும் உடைத்து சுக்கு நூறாக்கிப் போட்டுவிட்டது இந்தத் தேர்தல். இது வரை பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள் பல. ஒன்று, பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க இயலாது. ஜனநாயகம் போய் ...