வாக்குச் சந்தையில் உருவாகுமா மக்களாட்சி? இன்னும் மக்களாட்சியின் மாண்புகளையே உணராத வாக்காளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நிறைந்துள்ளனர். இன்னும் அரசியல் கட்சிகளே ஜனநாயகப்படவில்லை. எஜமானத்துவமும், அடிமைத்தனமும் ஓங்கி உள்ளன. குடிமைப் பண்பை வளர்க்கும் கல்வியை எப்போது பயிற்றுவிப்போம்; அலசுகிறார், பேராசிரியர் க.பழனிதுரை; மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஓர் அரசாங்கத்தை அமைக்கின்றனர். தங்களுக்கு யார் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற உரிமை பெற்றவர்கள் குடிமக்கள். அறிவுபூர்வமாக அந்த முடிவை எடுக்க அவர்களுக்குத் செய்திகள் உதவுகின்றன. தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? அவரின் பின்புலம் என்ன? அவர் தரும் ...



















