மாற்று அரசியல் என்பது என்ன? மக்கள் நலன் குறித்து சிந்தித்து செயல்படாத ஆட்சியாளர்கள், அவர்களை அண்டிப் பிழைக்கும் தோழமை கட்சிகள், ஆளும் கட்சி செய்த தவறுகளையே தானும் செய்யக் காத்திருக்கும் எதிர்கட்சிகள், விலை போன ஊடகங்கள், விழிப்புணர்வு இல்லாத மக்கள்.. என்ன தான் தீர்வு..? -க.பழனிதுரை இன்றுள்ள சூழலுக்கு மாற்றுத் தேட வேண்டும். எங்கும் ஒரு தேக்கநிலை. தேக்கமில்லாது இருப்பது சந்தை மட்டுமே. தேக்கநிலை மட்டுமில்லை, ஒருவித சலிப்பு, வெறுப்பு, விரக்தி, அமைதியற்ற நிலை. அது மட்டுமல்ல, ஒரு அச்சம் எல்லோரையும் பிடித்துக் கொண்டுள்ளது. ...