காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் மத நல்லிணக்கத்துக்கான ‘மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால்,கோவையில் மட்டும் அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது..! தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்பது பல கட்சிகள், பொது அமைப்புகளின் சேர்வையாகும்! இதன் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்’ எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டன! மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் ...