ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல, நாட்டுக்கு இளைத்தவர் அரசு பள்ளி ஆசிரியர்களா? யாரும் கேட்க நாதியில்லாதவர்கள் அரசு பள்ளி மாணவர்களா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சதா சர்வகாலமும் அரசு பள்ளி ஆசிரியர்களை – பொதுப் பணிகளுக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு -போன்றவற்றுக்கு இழுத்தால், என்னாவது மாணவர்களின் படிப்பு..? எனது நாற்பத்தியொரு கால பத்திரிகையாளர் பணியில் அரசு பள்ளிகளின் நிலைமை ஆண்டுக்கு ஆண்டு கவலைக்கிடமாகவே சென்று கொண்டுள்ளது. ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு அவல நிலையில் உள்ளது. கடந்த ...
















