தேசியக் கல்விக் கொள்கை  2020 என்பது கல்வியைத் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், மத்தியமயமாக்கல்  மற்றும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கானது. இதற்கு மாற்றாக ‘ வரைவு மக்கள் கல்விக் கொள்கை’ 2025 உருவாக்க, ஒரு வரலாற்று நிகழ்வு பெங்களூரு மாநகரத்தில் நிகழ்ந்தது. அதன் சாராம்சம். இந்திய கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பெங்களூரில் ஜனவரி, 24,2026 அன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இராமையா தொழில் நுட்ப கல்வியகத்தில் கூடினர். அவர்கள் 26 மாநிலங்களின் மக்கள் பாராளுமன்ற பிரதிகள். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் பேரா சுகதேவ் தோரத் ...